Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

படவிழாவை புறக்கணித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் இப்போது தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள ‘டில்லு ஸ்கொயர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் வெளியீட்டு முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொள்வதை அனுபமா தவிர்த்தார். அதற்கு காரணம் என்ன என்பதை படத்தின் நாயகன் சித்து மேடையில் நேற்று தெரிவித்தார்.

“இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்று இன்று வெளியானது. அதில் அனுபமாவை ரசிகர்கள் பலரும் கிண்டலடித்துள்ளனர். நடிகை என்று வரும் போது அவர்களை பற்றிய கமெண்டுகளை கவனமாக கையாள வேண்டும். இதனால்தான் அனுபமா நிகழ்ச்சிக்கு வரவில்லை” என்று கூறினார்.

குறிப்பிட்ட போஸ்டரில் அனுபமாவின் தோற்றம் ஆபாசமாக இருந்ததாக கூறி, அவரை நெட்டிசன்கள் தரக்குறைவாக விமர்ச்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News