டாப் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட போகிறது.இந்த கூலி படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல ஆக்ஷ்ன் காட்சிகளோடு டைட்டில் டீசரையே ட்ரெய்லர் ரேன்ஞ்சுக்கு கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்தார் லோகேஷ் கனகராஜ்.
ரஜினியின் பழைய கால எவர்கிரீன் படங்களை நினைவுபடுத்தும் வகையில் டிஸ்கோ பாடல் மற்றும் மேலும் சில பாடல் வரிகளென வேற லெவலில் ட்ரீட் கொடுத்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். இப்படி அந்த டைட்டில் டீசரை ரிப்பீட் மோடில் பார்த்து ரசிகர்கள் ஒவ்வொன்றையும் கொண்டாடி வருகின்றனர்.இப்படியிருக்க கூலி படத்திற்கு லோகேஷின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது லோகேஷ் இதற்கு முன்னதாக லியோ படத்துக்காக 50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருந்தார்.தற்போது தமிழ் சினிமாவில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் இயக்குனராக நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்க்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 60 கோடியை சம்பளமாக கொட்டி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பவே இப்படி கொட்டி கொடுக்கும் சன் பிக்சர்ஸ் படம் வெளியாகி வசூலை வாரி குவிக்கும் போது அதில் லோகேஷ்க்கு ஒரு பங்கை கொடுக்காமலா போகும் என்று பேசப்படுகிறது.