தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் அர்ஜூன் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். சமீபகாலமாக அவர் குணச்சித்ரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்க வருகிறார். நடிப்பைத் தாண்டி, இயக்குனராகவும் பயணித்துவரும் அர்ஜூன், ‛ஜெய்ஹிந்த்’, ‘எழுமலை’ போன்ற பல வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக 2018ல், தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ‘சொல்லிவிடவா’ என்ற படத்தை இயக்கினார்.

அதன்பிறகு, தெலுங்கில் தனது மகளை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார், ஆனால் அந்த படம் நிறைவுக்கு வரவில்லை. இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ‘சீதா பயணம்’ என்ற படத்தை இயக்கி, தயாரிப்பதாக அறிவித்துள்ளார்.

படத்தின் நடிகர்கள் மற்றும் பிற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அர்ஜூன் தெரிவித்தார். பெரும்பாலானவர்களின் கணிப்பில், இந்தப் படத்தில் அவரது மகள் ஐஸ்வர்யாவும் நடிக்க வாய்ப்புள்ளது. மேலும், அர்ஜூன் தற்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.