Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

நடிகர்கள் ரஜினியும் கமலும் ஒன்றாக நடிப்பார்கள்… பரபரப்பான சூழலில் நடைப்பெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் இன்று (செப்டம்பர் 8) காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து பல நடிகர், நடிகைகள், நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி பேசுகையில், “நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணிகள் நின்று போன நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக நிதிச்சுமை அதிகரித்துள்ளது. நடிகர் சங்கத்தின் கடன்களை அடைக்க கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இணைந்து பங்கேற்பதாக உறுதியளித்தனர். நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நேரடியாக நிதியாக ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்,” என்றார்.

கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹேமா கமிட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றிய அறிக்கை தமிழ் திரையுலகிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், “பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்” என விசாகா கமிட்டியின் தலைவர் நடிகை ரோகிணி வலியுறுத்திளார்.

- Advertisement -

Read more

Local News