சுந்தரபாண்டியன் படத்தில் நடித்ததின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தொடர்ந்து, அவர் பல்வேறு திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000062107-1024x614.webp)
நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக, நடிகர் சௌந்தரராஜா தனது சொந்த ஊரான மதுரையில், மீனாட்சி அம்மன் திருக்கோவிலில், விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகள் நடத்தி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை வைத்து வழிபாடு செய்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000062113-1024x614.webp)
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின், அந்த கொடியை விஜய்யிடம் வழங்குவதாக முடிவு செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
பூஜை நிகழ்ச்சிக்குப் பின், நடிகர் சௌந்தரராஜா, மதுரை மக்களுக்காக இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். நடிகர் விஜய்க்கு அவர் கொண்டுள்ள பாசம் மற்றும் மக்கள் மீதான விஜய்யின் பேரன்பின் வெளிப்பாடாக இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தி மக்களுக்கான இனிப்புகளை வழங்கினார் என்று அவர் தெரிவித்தார்.