நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் ஒரு பக்கா ஆக்ஷன் கமெர்ஷியல் திரைப்படமாக அமைந்துள்ளது.படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழு கலந்துக் கொண்டனர் அதில் வெங்கட் பிரபு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில் படத்தின் டி ஏஜிங் லுக்கிற்கு வந்த கமெண்ட் பற்றிய கேள்விக்கு ” நான் விஜயை 23 வயது இளைஞனாக திரையில் காட்ட நினைத்தேன். அவரே என்னிடம் கூறியுள்ளார் என்னை மாதிரி இல்லாம போய்ட போது அத மட்டும் நீ பாத்துக்க என்று கூறுனார். இது எங்களுக்கு கிடைத்த படிப்பினை. ரசிகர்களுக்கு அது பிடிக்கவில்லை என்பதால் நாங்கள் தற்பொழுது மாற்றியுள்ளோம், இதனால் தான் டிரைலர் வருவதில் தாமதமானது.” என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு இப்படம் விஜய் சார் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் . ஒரு ப்ராப்பர் கமெர்ஷியல் படத்தில் விஜய் சாரை நடிக்க வைக்க வேண்டும் என்பது எனது ஆசை. திரைப்படம் படக்குழுவினர் பார்த்தனர் அனைவருக்கும் மிகவும் பிடித்து இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா விஜய் சாரோட தனிப்பட்ட முடிவுதான். இதுக்குறித்த தகவல் இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிக்கிறோம். இப்படம் 6 வயதில் இருந்து 60 வரையுள்ள மக்களுக்கு பிடிக்கும். ஜெமினி மேன் திரைப்படத்தின் கதை இது அல்ல என்றார்.மேலும் படத்தில் மறைந்த நடிகர் விஜய்காந்த ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு நடித்திருப்பதை உறுதி படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு.