Tuesday, April 23, 2024

தமிழுக்கு நோ’ தெலுங்குக்கு எஸ் சொன்ன சந்தீப்‌..காரணம் இதுதானாம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் பழைய கால நடிகர்களையும் தனது படத்தில் தேர்வு செய்து நடிக்க வைத்து ரீ என்ட்ரி கொடுக்க வைத்து‌ வரும் நிலையில் அப்படி லோகேஷ் கொடுத்த வாய்ப்பால் மாநகரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சந்தீப் கசன்.இவர் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கசன். தெலுங்கில் அதிக படங்கள் நடித்து பிரபலமானவர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.தனுஷ் நடிக்கும் ராயன் படத்திலும் சந்தீப் கிஷன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் மற்றும் சந்தீப் இருவருமே நெருங்கிய நல்ல நண்பர்கள்.என்னதான் சந்தீப் கசன் தமிழ் ரசிகர்களை கவர்ந்தாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிதும் மார்கெட் இல்லை.இதை அறிந்த அவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். லோகேஷ் கனகராஜ் சார்லி, மன்சூர் அலிகான் போன்றவர்களுக்கு தனது படங்களில் வாய்ப்பு கொடுத்து அவர்களை கம் பேக் கொடுக்க வைத்தது போல் சந்தீப் கசன்க்கு சமீப காலமாக ஒரு வாய்ப்பு அமையவில்லை.

தெலுங்கு சினிமா பக்கம் சென்ற சந்தீப்புக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் வருகின்றன.அதுமட்டுமல்லாமல் அவருக்கான மார்க்கெட் அங்கு அதிகம்.டாப் ஹீரோவுக்கு இணையாக அங்கு போட்டி போட்டு கொண்டு இருக்கிறார் சந்தீப் கசன்.

- Advertisement -

Read more

Local News