சன் டிவியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல வாரங்களாக ப்ரோமோக்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், பெற்று முதல் இதன் முதல் எபிசோட் ஒளிபரப்பாகி உள்ளது. இதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விஜய் டிவியில் தயாரித்த மீடியா மேன்சன் நிறுவனம் தான் தற்போது சன் டிவியில் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரபலங்களை பற்றிய விவரங்களை இங்கே காணலாம். வெள்ளித்திரைக்கு நாயகியாக பிரபலமான சோனியா அகர்வால் இதில் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.அடுத்ததாக, அஜித்தின் வில்லன், டிடி ரிட்டன்ஸ் போன்ற படங்களில் வில்லனாக நடித்த FEFSI விஜயன் இதில் பங்கேற்கிறார். மேலும், வில்லன் நடிகர் சாய் தீனா, பிளாக் ஷீப் சேனலில் நடிகராக பிரபலமான நரேந்திர பிரசாத் ஆகியோரும் போட்டியாளர்களாக இறங்கியுள்ளனர்.

கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி, நடிகை சுஜாதா சிவகுமார், இயக்குனரும் நடிகருமான சிங்கம் புலி, விஜே ஷாலி நிவாகஸ், பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர்.மொத்தம் ஒன்பது பிரபலங்கள் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கும் நிலையில் மேலும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கும் என கூறுகின்றனர்.

இதனால், இந்த நிகழ்ச்சி சண்டே கலாட்டாவாக ஆரம்பமாகியுள்ளது.’குக் வித் கோமாளி’ அளவிற்கு இந்த நிகழ்ச்சி இருக்குமா? டிஆர்பியில் சாதிக்குமா? என்பதற்கு அடுத்தடுத்த எபிசோடுகள் தான் முடிவு கூறும். இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.