Tuesday, November 19, 2024

சூர்யா 44 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு நடக்கப்போகிறது தெரியுமா? #Suriya44

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதில் பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே அந்தமானில் முடிவடைந்தது. கடந்த சில வாரங்களாக ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது, அது தற்போது முடிவடைந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள இடுக்கியில் நாளை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News