Tuesday, November 19, 2024

சூடு பிடித்த விஜய்யின் ‘தி கோட் ‘ படத்தின் ப்ரோமோஷன் பணிகள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய்யின் கோட்திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. விஜய்யின் 68வது படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஆக்சன் மற்றும் டீ-ஏஜிங் காட்சிகள் ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது. 

சமீபத்தில் கோட் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு பேசினார். கோட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேல் இருக்கும். என் திரைவாழ்வில் இதுவே மிகப்பெரிய படமாக இருக்கும். நிச்சயம் ரசிகர்களை கவரும், என்று அவர் கூறினார். படக்குழுவினர் வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளனர். அதன்பின் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்களை வழங்க உள்ளனர். செப்டம்பர் 5 ஆம் தேதி கோட் உலகம் முழுவதும் வெளியாகும் என்பதால், புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் மெட்ரோ ரயிலில் கோட் பட விளம்பரங்கள் முழுவதும் இடம்பெற்றிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News