Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

சிரித்த பா.ரஞ்சித்….ரஜினியின் முதுகில் குத்திவிட்டார் என ரசிகர்கள் கொந்தளிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூப்பர் ஸ்டார் தலைவர் என எத்தனை பட்டங்கள் கொடுத்தாலும் அவரின் உருவம் எளிமை தான் அவர் தான் ரஜினிகாந்த். தமிழ் மட்டுமின்றி பிற மொழி சினிமாவிலும் பான் இந்தியா ஸ்டாராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். அவரின் 70 ஆண்டு கால சினிமா பயணம் தொடர்ந்து கொண்டு இருப்பது இளம் தலைமுறைக்கும் அனைத்து தரப்பினருக்கும் பெரிய உந்துதலாக உள்ளது. ரசிகர்களால் காலம் காலமாக கொண்டாப்பட்டு வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் தீவிரமாக நடித்துவருகிறார்.இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க போகிறார் ரஜினிகாந்த்.இப்பட டைட்டில் ஏப்ரல் 22 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் பாஸிட்டிவ் நெகடிவ் என பல விமர்சனங்களை சந்தித்து உள்ள ரஜினிகாந்த் என்றும் முடங்கி போனதே இல்லை.எல்லா விமர்சனங்களையும் தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு இன்றும் கொடிக்கட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு ரோல்மாடலாக இருந்து வருகிறார்.

இப்படியிருக்க, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்த விதம் பரபரப்பையும் ரஜினி ரசிகர்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் எக்ஸ்ல் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் நடித்தித்தார் ரஜினிகாந்த். இந்த படங்கள் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திற்கு ஆதரவாக வந்த படங்கள் அவர்களின் வலிகளை பேசும் படங்கள் இப்படங்களில் ரஜினிகாந்த் நடித்தார்.சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் பா ரஞ்சித்திடம், ரஜினியின் கபாலி மற்றும் காலா குறித்து இந்த படங்கள் தலித் சமூகத்திற்கு ஆதரவான படங்கள் என்று தெரியாமல் ரஜினிகாந்த் நடித்தாரா என்று கேள்வி கேட்க அதற்கு பா.ரஞ்சித் நக்கலாக சிரிப்பதாய் தெரிந்தது.

இதை கண்ட ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.இரு படங்கள் நடித்து வாய்ப்பு தந்து வாழ்க்கை தந்தவரை நன்றிக்கெட்ட தனமாக பா.ராஞ்சித் ரஜினிகாந்த் முதுகில் குத்திவிட்டார் என நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ்டேக் மூலம் அவர்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News