Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

சமோசா விற்கும் பெண்மணிக்கு ஆட்டோ

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமோசா விற்கும் பெண்மணிக்கு ஆட்டோ

‘குக் வித் கோமாளி’ பாலா நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறார். அதில் புதிதாக மின்சார ரயிலில் சமோசா விற்கும் முருகம்மாள் என்பவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து மகிழ வைத்திருக்கிறார். முருகம்மாவின் கணவர் திருமணமாகி சில ஆண்டுகளிலேயே காலமாகிவிட்டாராம். மூன்று மகள்களை ஆளாக்க சமோசா விற்று பிழைத்து வரும் முருகம்மாளுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருந்ததாம்.

இந்த தகவலை தெரிந்து கொண்ட பாலா. தன்னுடைய ராகவா லாரன்ஸ் உதவியுடன் முருகம்மாளுக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சசிக்கு ஆளாக்கி இருக்கிறார்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காளிதாஸ் ஜெயராம் படம்

அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் இணைந்து நடித்த ‘போர்’ திரைப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்கி இருந்தார். தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 1 ஆம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த திரையரங்குக்கு வரவேற்பும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இப்போது இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் போர் படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸுடன், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராசன், பானு, ஜான்விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இணையத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் “அடி கட்டழகு கருவாச்சி”

பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கள்வன்’. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் “அடி கட்டழகு கருவாச்சி” என்கிற பாடலை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. மாயா மகாலிங்கம், ஏகாதேசி இருவரும் எழுதியுள்ள இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து பாடி உள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ள நிலையில் இப்போது “அடி கட்டழகு கருவாச்சி” பாடலும் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாடலாக அமைந்திருக்கிறது.

இணையத்தை கலக்கும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’

ஆதம் பாவா இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிட இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆடுஜீவிதம் முதல் நாள் வசூல் ரூ 16.70 கோடி

பிளஸ்ஸி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரிதிவிராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் நேற்று முன்தினம் வெளியானது. உலகம் முழுவதும் 1724 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் 16 கொடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News