திரைக்காட்சிகளில் கவுண்டமணி அடிக்கும் நக்கல் நய்யாண்டிகள் பிரபலம். தவிர, நிஜத்திலேயே… படப்பிடிப்பு தளங்களிலேயே.. இப்படி கவுண்ட்டர் கொடுத்து சக நடிகர்களை அலறவிடுவார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி கூட, படப்பிடிப்பு சமயத்தில் டேக்கிற்கு செல்லும் முன், கவுண்டமணியிடம் ‘தயவு செய்து ஏதாவது சொல்லி மானத்தை வாங்கிறாதீங்க கவுண்டமணி’ என்று சொல்லிவிட்டு போவாராம்.
சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்த ‘ நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை கவுண்டமணி பார்த்தாராம். பார்த்து விட்டு சத்யராஜுக்கு போன் செய்து சொன்னாராம். அதற்கு படம் எப்படி இருக்குனு சத்யராஜ் கேட்டாராம்.
அதற்கு கவுண்டமணி ‘ நாய் நல்லா நடிச்சிருக்கு சத்யராஜ், உன் மகன விட நாய் நல்லா நடிச்சிருக்குப்பா’ என்று அவர் பாணியில் சொன்னாராம்.
இந்த தகவலை நடிகர் மீசை ராஜேந்திரன் கூறும் போது அவரால் அடக்கமுடியாத சிரிப்போடு கூறினார்.