நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்த வடிவேலுவுக்கு, அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை. ஆனால், அதன் பிறகு மாமன்னன் திரைப்படத்தில் அவர் நடித்த குணச்சித்ர வேடம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, பகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், கார்த்தி நடிக்கும் அவரது 29வது படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கவுள்ளார். மாமன்னன் படத்தில் போல காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத, ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் வடிவேலு மீண்டும் நடிக்க உள்ளார். மேலும், முதன்முறையாக நடிகர் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது, இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.