2023 ஆம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ விழாவில் `மாவீரன்’ படத்திற்காக ‘சிறந்த நகைச்சுவை நடிகர்’ விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு அந்த விருதை இயக்குநர் சிறுத்தை சிவா வழங்கினார். யோகி பாபு தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் போட் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
விழா மேடையில் பேசிய யோகி பாபு, இது விகடன் எனக்கு வழங்கும் நான்காவது விருது. இந்த விருதைப் பெற காரணமாய் இருந்த மாவீரன் பட இயக்குநர் அருண் விஷ்வாவுக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் மற்றும் எனது தம்பி மடோன் அஸ்வினுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன். கார்த்திக் சுப்புராஜ் சார் அழைத்த இரண்டு படங்களில் நடிக்க முடியவில்லை.
அடுத்து அவருடைய படத்தில் கண்டிப்பாக நடிக்க ஆசைப்படுகிறேன். நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் நெல்சன், எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் சிறுத்தை சிவா சார் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று மிகவும் மகிழ்ச்சியாக பேசியிருந்தார்.