பழம் பெரும் எழுத்தாளர் மறைந்த கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்த ஒன்று. இதை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர்., கமல் உள்ளிட்டோர் முயற்சித்து முடியாமல் போனது. இந்த நிலையில், லைகா நிறுவன தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது.
மக்களிடம் பேராதரவு பெற்ற இப்படம், பல நூறு கோடி வசூல் ஆனதாகவும் இன்னும் வசூல் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், “கல்கியின் படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டு விட்டன. ஆகவே அவரது படைப்புகளை யாரும் எடுத்து கையாளலாம். அதே நேரம், பொ.செ. வை வைத்து பல நூறு கோடி சம்பாதித்த மணிரத்தினம், லைகா தயாரிப்பு நிறுவன அதிபர் சுபாஸ்கரன் ஆகியோர் கல்கியின் குடும்பத்தினருக்கு உதவலாமே..
கல்கி குடும்பத்தினர் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள்தான். ஆனால், அவர்கள் நடத்தும் கல்கி அறக்கட்டளை மூலம் பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறார்கள். அந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி செய்யலாமே” என பலரும் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
என்ன சொல்லப் போகிறார்கள் இருவரும்?