பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் ‘எல் 2 எம்புரான்’. இப்படத்தில் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் சில காட்சிகள் அமைந்ததாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக 2002 குஜராத் கலவரம், ஹிந்து அமைப்பு ஒன்றின் தலைவர் பெயர் ஆகியவை குறித்து பல்வேறு எதிர்ப்புக் கருத்துக்களை எழுந்தன.இதையடுத்து படத்தின் நாயகன் மோகன்லால் வருத்தம் தெரிவித்து, அந்த சர்ச்சையான காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.தற்போது படத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் இடம் பெற்றிருந்த 2 நிமிடக் காட்சிகளை நீக்கியுள்ளார். படத்தில் வில்லனது பெயரையும் மாற்றி மீண்டும் தணிக்கை செய்துள்ளனர்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more