Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

எனக்கு ரசிகர்கள் இல்லையா? என் ரசிகர்களை திரையரங்குகளில் பார்ப்பீர்கள்… விக்ரம் பளீச்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்ரம் நடித்துள்ள “தங்கலான்” படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமிடம், “விஜய், அஜித், சூர்யாவை விட உங்களுக்கு குறைவான ரசிகர்கள் இருப்பது ஏன்?” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விக்ரம் பதிலளிக்கையில், “என் ரசிகர் பட்டாளம் குறித்து உங்களுக்கு சரியாக தெரியவில்லை. ‘தங்கலான்’ படம் திரைக்கு வரும் போது தியேட்டருக்கு வந்து பாருங்கள். எனக்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளனர் என்பது அப்போதுதான் உங்களுக்கு தெரியும். எனக்கு டாப் 3, 4 என்று வேண்டியதில்லை. எல்லா நடிகர்களின் ரசிகர்களும் எனக்கு ரசிகர்களே.

நான் ‘சாமி,’ ‘தூள்’ போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து விட்டேன். சினிமாவில் எனது தேடல் மாறுபட்டது. புது பரிமாணங்களைக் கொண்ட, புதுமையான கதைகளில் நடித்து சினிமாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே எனது நோக்கம். இப்போது, நீங்கள் “விஜய், அஜித், சூர்யா அளவிற்கு எனக்கு ரசிகர்கள் இல்லை” என்று கூறினாலும், ஒருநாள் இதே கேள்வியை அவர்களிடமும் கேட்பீர்கள்,” என்று விக்ரம் பதில் அளித்தார்.

- Advertisement -

Read more

Local News