நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். தி கோட் படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. இந்தப் படம் மிகப்பெரிய படமாக வெளிவரும் என்ற எண்ணத்தில் காத்துக்கொண்டுள்ளார்கள் ரசிகர்கள்.ஏனெனில் முதன்முறையாக விஜய்யை இயக்குகிறார் வெங்கட் பிரபு.தனக்கென ஒரு தனி மேக்கிங்-ஐ கொண்டிருப்பவர் வெங்கட் பிரபு.
தி கோட் படத்தில் விஜய்யுடன் 90களில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.பலர் இப்படத்தில் நடித்தாலும் மைக் மோகன் கதாபாத்திரம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரம் கேரளாவில் நடைபெற்றது. அதுதான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என கூறப்பட்ட நிலையில் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது.விஜய்,பிரசாந்த் உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன்பு தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை வந்திருந்தனர்.அதே சமயம் தி கோட் படத்தில் சிஜி பணிகள் அதிகம் இருப்பதாக வெங்கட் பிரபு சொல்லியிருக்கிறார்.
முன்னதாக கோட் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் சேட்டிலைட் உரிமை குறித்த புதிய தகவல் கசிந்துள்ளது. முதலில் சன் டிவி GOAT படத்தை வாங்குவதாக முடிவு செய்திருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அந்த முடிவிலிருந்து சன் டிவி பின்வாங்கிவிட்டதாம். பிறகு ஜீ நெட்வொர்க்கும் கைவிரிக்க கடைசியாக விஜய் டிவி வாங்குவதற்கான முயற்சியில் இறங்கியதாம். ஆனால் 12 கோடி ரூபாய் மட்டும்தான் கொடுப்போம் என்பதில் விஜய் டிவி தரப்பு கறாராக இருப்பதாகவும்; தொகையை ஏற்றுவதற்கு GOAT தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.