இசைஞானி இளையராஜாவின் தொடர்ச்சியான முயற்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அவரது வாழ்க்கையை மையமாக கொண்ட பயோபிக், தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் புதிய இசையமைப்பை மேற்கொள்ளாமல், அவரது பழைய படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா, இசைஞானி என பிரபலமானவர். அவரது பாடல்கள் பலரும் பாராட்டியவை, குறிப்பாக எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் பாடல்கள் விமர்சன ரீதியாக அதிக வரவேற்பைப் பெற்றன. இன்றும், தனிமையில் இருக்கும் போது இளையராஜாவின் பாடல்களை ரசித்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இளையராஜா, தன்னை குறித்த விமர்சனங்களை கவனித்து வருவதாகவும், ஆனால் அவற்றைப் பற்றி கவலைப்பட நேரமில்லையென்றும் அவர் கூறியுள்ளார். 35 நாட்களில் சிம்பொனி இசையில் புதிய முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்தபோது இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என கருதப்பபடுகிறது.
இப்போது, அவரது மற்றொரு புதிய முயற்சியாக, சென்னை ஐஐடி மெட்ராஸூடன் இணைந்து இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் துவக்கவிழாவில் நேற்றைய தினம் இளையராஜா பங்கேற்றார். இதற்காக ஐஐடி மெட்ராசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அவர் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
