Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே என்ற சித்தர் வாக்கு தான் இப்படத்தின் அடிப்படை- ஹிப் ஹாப் ஆதி டாக்! #KadasiUlagaPor

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘கடைசி உலகப்போர்’. இதில் நாசர், நட்டி நட்ராஜ், அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

20ஆம் தேதி உலகமெங்கும் திரையிடப்பட உள்ள நிலையில், முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசுகையில், “இந்தப் படம் மற்ற படங்களிலிருந்து தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இப்படத்தை எடுக்க வழிவகுத்தது தொழில்நுட்ப கலைஞர்கள் தான். ‘ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே!’ என்ற சித்தர் வாக்கு தான் இப்படத்தின் அடிப்படை. இப்படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும், என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News