பிக்பாஸ் வீடு தற்போது அரண்மனை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பான அமர்வில் ஆண்களின் அணியில் ராணவ் ராஜாவாகவும், பெண்களின் அணியில் சாச்சனா ராணியாகவும் அரியணையில் அமர்ந்துள்ளனர். ஆனால், இருவரும் ஒன்றுசேர அமர முடியாது என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார். இருவர் மத்தியில் ஒருவருக்கு மட்டுமே அந்த அரியணை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
அதற்கான டாஸ்க்கில் ஆண்களின் அணியில் இருந்து கலந்து கொண்ட ராணவ் வெற்றி பெற்று, அரியணையில் அமருகிறார்.இதற்கிடையில், ராணியாக இருந்த சாச்சனாவின் உத்தரவுகளை வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் கேட்காமல் இருந்ததால், அவர் கடும் கோபம் கொண்டார். “என்ன சமைப்பது? என்று கேட்ட போது, “பொறுத்திருங்கள், நான் கூறுகிறேன்” என்று பதிலளித்தார்.
அதன் பின்னர், சாச்சனா தனது அதிகாரத்தை வெளிப்படுத்தும் வகையில், சாப்பிடாமல் இருக்க வேண்டும்” என்று உத்தரவு விடுத்தார். இதற்காக அனைத்து வேலைக்காரர்களும் உணவு சாப்பிடாமல் இருப்பதற்கான முடிவை எடுத்தனர்.இந்த நிலைமைக்கு ராணவ் ராஜா என்ன பதிலளிக்கப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.