நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் , தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்த கல்கா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1000 கோடி வசூலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய தோற்றம் மிகவும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில், அமிதாப் பச்சன் எவ்வாறு அஸ்வத்தாமாவாக மாறினார் என்பதற்காக பிரபல ஒப்பனை கலைஞர் பிரீதிஷீல் சிங் கூறியதாவது,

அமிதாப் பச்சனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அஸ்வத்தாமா மிகவும் சுவாரஸ்யமான பாத்திரம் என்பதால் இந்த பணி சுவாரஸ்யமாக இருந்தது. அவர் எப்படி இருக்க வேண்டும் என்று படக்குழு என்னிடம் தெளிவாக தெரிவித்தது. அதன்படி, அவரை நாங்கள் தோற்றப்படுத்தினோம். அவரை மிகவும் வயதான தோற்றத்திலும், அவரை சுற்றி அனைத்தும் இருளாகவும் உருவாக்கினோம்.


நீங்கள் அவரின் நெற்றியில் ஒரு கல் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது இயற்கையாக இருக்க வேண்டும், அதே சமயம் நெற்றியில் நாங்கள் பொருத்திய சாதனத்துடன் தடையின்றி இணைக்க வேண்டும் என்பதற்காக அதற்கு சரியாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட கல்லை பயன்படுத்தினோம்,” என்றார். மேலும், “கல்கி 2898 ஏடி யதார்த்தத்தில் உருவான ஒரு மகத்தான படம்” என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.