விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ், விவேக் ஆகியோர் நடித்த “அந்நியன்” படம், 2005 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ஷங்கர் இயக்க, ஜெயந்திலால் தயாரிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தி ரீமேக் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், ஒரு நேர்காணலில் விக்ரம், “அந்நியன்” படத்தின் இந்தி ரீமேக் குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார். அவர், “ஷங்கர் சார் என்னை வைத்து ‘அந்நியன்’ படத்தின் 2ம் பாகத்தை எடுத்திருக்க வேண்டும். அந்நியன் ஹிந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் ஒரு நல்ல நடிப்பை கொடுத்திருப்பார். ரன்வீர் சிங்கை நட்சத்திரமாக நான் மிகவும் விரும்புகிறேன், அவர் அந்த பாத்திரத்தில் நடிப்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருந்திருக்கும், என்று கூறினார்.

“அந்நியன்” தெலுங்கில் “அபரிசிடு” என்ற பெயரிலும், இந்தியில் “அபரிசித்” என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. “அந்நியன்” படத்தின் இந்தி ரீமேக்கிற்கான அறிவிப்பு 2021-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. கடைசியில் சில காரணங்களால், இந்தி ரீமேக் திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்று இயக்குனர் ஷங்கர் கடந்த ஜூலை மாதம் உறுதிப்படுத்தினார். விக்ரம், கடைசியாக பா ரஞ்சித் இயக்கிய “தங்கலான்” படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியானது மற்றும் நல்ல வரவேற்பை பெற்றது. மறுபுறம், ரன்வீர் சிங் அடுத்ததாக ரோஹித் ஷெட்டியின் “சிங்கம் அகெய்ன்” படத்தில் நடிக்கவுள்ளார், இது இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.