Saturday, January 11, 2025

அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்…‌ நடிகர் வடிவேலு கொடுத்த அடுத்தடுத்த அப்டேட்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை ஆணையர் சஞ்சய் ராய் மற்றும் முதன்மை ஆணையர் வசந்தனர் தலைமை தாங்கினர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எனது தாய் முருகனை வேண்டிக் கொண்டு எனக்கு வடிவேலு என்ற பெயரை வைத்தார். ஆனால் உறவினர்கள் எனது பெயரை நாராயணன் என மாற்றினார்கள். அதன் பின்னர் எனது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், என் தாய் ‘வடிவேலு’ என்ற பெயரே இருக்கட்டும் எனக் கூறினார். அந்த பெயரின் சக்தியால் தான் இன்று நான் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக உள்ளது,” என்றார்.

அதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகையை மக்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற என் ஆசை இங்கே நிறைவேறியது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்துவிட முயற்சிக்கிறேன். முன்பெல்லாம் மாட்டை கட்டுப்பாடு இல்லாமல் அவிழ்த்து விடுவார்கள்; அது எங்கு போகும் என தெரியாது, பின்னால் வந்து குத்திவிடும். ஆனால் தற்போது மிகச் சிறந்த முறையில் கட்டுப்பாட்டுடன் நடத்துகின்றனர்,” என்றார்.

மேலும், பொங்கல் விழாவை முடித்தவுடன் மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டும். அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன். தற்போது சுந்தர் சி இயக்கும் கேங்கர்ஸ் படத்திலும், பகத் பாசிலோடு மாரிசன் படத்திலும் நடித்து வருகிறேன். பிரபு தேவாவுடன் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளேன்.

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு நான் ஒரு வேண்டுகோள் கூறுகிறேன், வரிவிதிப்பு முறையில் ஏழைகளுக்கு சிராய்ப்பில்லாமல் செய்க. மாமன்னன் படத்தில் நடிக்கும் போல, என் வாழ்க்கையிலும் நான் நிறைய சிரமங்களை சந்தித்தேன். அந்த சிரமங்கள்தான் இன்று என்னை ஒரு சிறந்த காமெடி நடிகராக மாற்றியிருக்கிறது,” என்று அவர் உரையாற்றினார்.

- Advertisement -

Read more

Local News