இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ‘இனிமேல்’ என்கிற இசை ஆல்பத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், இப்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘சென்னை ஸ்டோpilip ரி’ என்கிற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை பிலிப் ஜான் இயக்குகிறார்.

டிமேரி என்.முராரியின் ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்’ என்கிற ரொமாண்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தில் அனு என்கிற டிடெக்டிவ் பாத்திரத்தில் நடிக்க சமந்தா முடிவாகி இருந்தார். படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் சமந்தாவுக்கு தசை அழற்சி ஏற்பட்டு படத்தில் இருந்து விலகி உள்ளார்.
இதனால், அந்தப் பாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனை படக்குழு பேசி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர். சர்வதேச படமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.
ஹாலிவுட் படத்தில் நடிப்பது தனது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார்.