தளபதி விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையயில் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று அறிவிப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் விஜய்யின் தி கோட் படத்தின் புதிய போஸ்டர்-ஐ வெளியிட்டுள்ளார். அதோடு இன்று கோட் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தேன். இன்னமும் நாங்கள் உங்களுக்கு சிறப்பானதை தர தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறோம் விரைவில் தளபதியை திரையில் பார்ப்பீர்கள். இது உங்களுக்கு சிறிய ட்ரீட் என கோட் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களின் கதாபாத்திர தோற்றங்கள் அடங்கியவாறு ஒரு போஸ்டர்-ஐ வெளியிட்டுள்ளார் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.