வெங்கட் பிரபு விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து ‘GOAT’ படத்தை இயக்கி வருகிறார். அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செப்டம்பர் 5ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.
சூழல் இப்படி இருக்க செப்டம்பர் மாதம் படம் ரிலீஸாகாது என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “கோட் திரைப்படத்தின் ரிலீஸுக்காக நாங்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் விடாமல் உழைத்துக்கொண்டு வருகிறோம்.
கண்டிப்பாக சொன்னபடி கோட் திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸாகும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எனவே வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கோட் படத்தின் அடுத்த அப்டேட் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டிருக்கிறார்.