தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பழைய வெற்றிப் படங்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி மீண்டும் வெளியிடும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்த வரிசையில், 2005-ம் ஆண்டு விஜய் மற்றும் ஜெனிலியா நடித்த ‘சச்சின்’ திரைப்படம் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
‘சச்சின்’ திரைப்படம் வெளியானது இன்று 20 ஆண்டுகளை கடந்துள்ளதால், அந்த சிறப்பை நினைவுபடுத்தும் விதமாக படத்தைக் காண ரசிகர்கள் திரையரங்குகளுக்கு திரண்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் ரசிகர்கள் இதை கொண்டாடும் விதமாக உற்சாகத்துடன் திரையரங்குகளில் பங்கேற்றுள்ளனர்.