Saturday, July 13, 2024

ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்… காத்திருக்கும் ‘பென்ஸ்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ள கதை தான் பென்ஸ். இந்த கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் இந்த புதிய படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் இனிமேல் ஆல்பம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என மூன்று அவதாரங்களை எடுத்து அசத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தை தொடங்கி விஜய்குமார் நடிப்பில் ஃபைட் க்ளப் படத்தை தயாரித்து வெளியிட்டார். தற்போது பென்ஸ் என்ற கதையை ரெடி செய்துள்ளார்.இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ள இந்த கதையை ரெமோ மற்றும் சுல்தான் படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் படமாக இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் இந்த பென்ஸ் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Read more

Local News