Saturday, July 27, 2024

யஷ் ஜோடியாக ஷங்கர் பட நாயகி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கே.ஜி.எப். படங்களின் வெற்றியால் இந்தியா முழுவதும் புகழ் பெற்றவர், கன்னட நடிகர் யஷ். இவர் அடுத்து நடிக்கும் படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். மலையாள மொழியில் பல படங்களில் நடித்த கீது மோகன்தாஸ், இந்தியில் இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். பல விருதுகளையும் பெற்றவர்.

யஷ் நடிப்பில் அவர் இயக்க இருக்கும் படத்துக்கு ‘டாக்ஸிக்’ என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்துக்காக உருவான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ், மற்றும் மான்ஸ்டர்மைன்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

யஷ்ஷின் 19வது படமாக உருவாகும் இந்தப்படத்தில் இந்தி நடிகை கரீனா கபூர் கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அவர் யஷ்ஷின் சகோதரியாக நடிக்கிறார். யஷ் ஜோடியாக சுருதி ஹாசன் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இப்போது அவர் நடிக்கவில்லை என்றும் கியாரா அத்வானி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

கியாரா அத்வானி, இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

Read more

Local News