Tuesday, July 2, 2024

மீண்டும் அனிமல் பட இயக்குனருடன் இணையும் ராஷ்மிகா மந்தனா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அர்ஜூன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. விரைவில் இவர் பிரபாஸை வைத்து ‘ஸ்பிரிட்’ எனும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். இதன் பட்ஜெட் மட்டும் ரூ. 300 கோடி என ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சந்தீப் இயக்கிய அனிமல் படத்தில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மூலம் முதன்முறையாக பிரபாஸ் உடனும் நடிக்க போகிறார் ராஷ்மிகா.

தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார் ராஷ்மிகா மந்தனா தனுஷின் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.அதேபோல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News