பள்ளியில் படிக்கும் போது பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்ட ராஷி கண்ணா, கல்லூரியில் படிக்கும் போது மாவட்ட கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவார். ஆனால், மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வம் அவரை நடிகையாக்கியது. டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா, மாடலிங் துறையில் நுழைந்து சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். மெட்ராஸ் கஃபே என்கிற ஹிந்தி படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு சினிமாவில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டு தமிழில் வந்தார்.
தமிழில் அவர் அறிமுகமான படம் “இமைக்கா நொடிகள்”. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் தொடர்ச்சியாக தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது. “அடங்க மறு” படத்தில் ஜெயம் ரவியுடனும், “அயோக்யா” படத்தில் விஷாலுடன் நடித்தார். கோலிவுட்டில் துவங்கிய ராஷி கண்ணாவின் பயணம் தொடர்ந்து வருகிறது. “அரண்மனை 3”, “அரண்மனை 4” ஆகிய படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில், அடிக்கடி சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.