அண்மையில் எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் அமைச்சரான ஆர். எம். வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98. ஆர். எம். வீரப்பன், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர்.
இந்நிலையில், மறைந்த அரசியல் பிரமுகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர். எம். வீரப்பனின் பிறந்தநாளை (செப்டம்பர் 9) முன்னிட்டு சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பாடலில், நடிகர் ரஜினிகாந்த் ஆர். எம். வீரப்பனுக்கு மரியாதையை செலுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.