Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தீபக்கை கரம்பிடிக்கும் டாடா பட நாயகி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘பீஸ்ட்’, ‘டாடா’ போன்ற படங்களில் நடித்தவர் அபர்ணா தாஸ். ‘பீஸ்ட்’டில் விஜய்யுடன் மாஸ் காட்டிய அபர்ணா, ‘டாடா’ படத்தில் கவினுடன் ரொமான்ஸ் செய்து சிலிர்க்க வைத்தார். மலையாளத்தில் அறிமுகமாகி தமிழில் புகழ் பெற்ற அபர்ணா தாஸ், மலையாளத்தில் தன்னுடன் ‘மனோகரம்’ படத்தில் நடித்த தீபக் என்பவரை காதலித்து வந்தார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்த தீபக் பரமோல், சமீபத்தில் வெளியாகி மிகப்பரிய வெற்றிப் பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் சுதி என்கிற பத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர். இப்போது தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார்.

இந்த தகவலை தீபக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். வருகிற 24ம் தேதி வடக்கஞ்சேரியில் எங்களது திருமணம் நடைபெறும் என தெரிவித்திருக்கிறார். அபர்ணா தாஸ் – தீபக் பரமோல் இருவருக்கும் ரசிகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News