Saturday, July 27, 2024

மகன் படத்தில் நடித்த சித்தி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரசாந்த் நடித்த ‘தமிழ்’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகி விக்ரம் நடித்த ‘சாமி’, சூர்யா நடித்த ‘சிங்கம்’ உட்பட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹரி. இவர் நடிகை பிரீத்தா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் ஸ்ரீராம் விஸ்காம் படித்து வருகிறார். இது அவருக்கு இறுதி ஆண்டு என்பதால் அவரின் ப்ராஜெக்டிற்காக ‘ஹூம்’ என்கிற பைலட் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அவரது சித்தி ஸ்ரீதேவி விஜயகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

தனது மகன்களை அவர்கள் விருப்புவதை படிக்க வைக்கும் இயக்குநர் ஹரி, மூத்த மகனின் விருபத்தை தெரிந்து கொண்டு விஸ்காம் படிக்க ஏற்பாடு செய்தார். தந்தையை போல திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்பது ஸ்ரீராம் ஆசை. அதற்கான முதல் முயற்சியாக ஹூம் படம் அமைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். பலரது பாராட்டும் வாழ்த்தும் கிடைக்கப்பெற்ற ஸ்ரீராம், இப்போது ஹூம் பைலட் படத்தை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News