Thursday, September 5, 2024

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை மேகாலி மீனாட்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பெங்காலி படங்களில் நடித்தவர் மேகாலி மீனாட்சி. பின்னர் அவரது திரைப்பயணத்தை தமிழில் தொடங்கினார். அவர் ஜித்தன் 2, அப்பத்தா, ஸ்கெட்ச், ஆருத்ரா போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ‘இறுதிமுயற்சி’ என்ற திரைப்படம் அவர் முழுமையான நாயகியாக அறிமுகமாகும் படம்.

இந்த படத்தை பார்த்திபனின் உதவியாளராக இருந்த வெங்கட் ஜனா எழுதி இயக்கியுள்ளார். விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் ஆகியோரும் பல முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். சூர்யா காந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்; இசையை சுனில் லாசர் அமைத்துள்ளார்.

இந்த படத்தைப் பற்றி இயக்குனர் வெங்கட் ஜனா கூறுகையில், சாதாரண கடைக்காரரிடமிருந்து மிகப்பெரிய தொழிலதிபர் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையைப் பற்றிய சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை, மக்கள் குடும்பத்துடன் ரசிக்கும்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News