Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்… மார்ட்டின் பட நடிகர் துருவா சர்ஜா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அர்ஜுன் கதை திரைக்கதை எழுதியுள்ள படம் “மார்டின்”. இதில் கன்னட நடிகர் துருவா சர்ஜா கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் அர்ஜுனின் சகோதரியின் மகன். நாயகியாக அன்வேஷி ஜெயின் நடித்துள்ளார். ஏ.பி. அர்ஜுன் இயக்கியுள்ளார். ரவி பஸ்ரு இசையமைத்துள்ளார்.

முழுமையாக ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி, ஜப்பான், சீனா, அரபு, கொரியா என 13 மொழிகளில் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்திய தேசப்பற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் துருவா சர்ஜாவின் ஆக்சன் காட்சிகள் உலக தரத்தில் அமைந்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் துருவா சர்ஜா, “எனது அங்கிள் அர்ஜுன் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அவர் சம்மதம் சொன்னால் உடனே நடிக்க தயார். எனக்கு சினிமாவிலும் வாழ்க்கையிலும் அவர் தான் காட்பாதர்” என்று கூறினார். அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியான “மார்ட்டின்” டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News