ஜீத்து ஜோசப் மலையாளம் மட்டுமின்றி மற்ற மொழி சினிமா களத்திலும் விரும்பக்கூடிய ஒரு இயக்குனர். மலைலையாளத்தில் ஹிட் அடித்த த்ரிஷ்யம் படத்தை தழுவி தமிழில் பாபநாசம் என்ற படத்தை கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடிக்க, எழுதி இயக்கினார். இப்படிப்பட்ட புகழ்பெற்ற இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் எடுத்த ஒரு திரைப்படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்து மீதி பாதியை எடுக்க முடியாமல் தவித்து வருகிறாராம்.

இயக்குனர் ஜீத்து ஜோசப் தனக்கு எப்போதும் ஃபேவரைட் ஆன மோகன்லால் மற்றும் த்ரிஷாவை வைத்து கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பு மிகப்பெரிய பொருட்செலவில் ராம் என்ற படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணத்தால் தடைப்பட்டு பாதியிலேயே நின்றுவிட்டது.
இந்நிலையில் இப்படத்தின் மீதி பாதி படப்பிடிப்பை தொடங்கலாம் என்றால் நடிகர்களின் தோற்றமும் லோகேஷன்கள் போன்றவை மிகவும் அதிகமாக வேறுப்படுகிறதாம். அப்படியே எடுத்துவிடலாம் என நினைத்தாலும் மோகன்லால் ஒருபுறமும் த்ரிஷா ஒருபுறமும் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்க அவர்களிடம் இருந்து தேதிகள் கிடைக்காமல் திணறி வருகிறாராம்.

இந்த படத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து பாதி படப்பிடிப்பை முடித்த நிலையில் மீதி பாதியை எப்படியாவது எடுத்து முடித்து இப்படத்தை திரைக்கு கொண்டுவர போராடி கொண்டு இருக்கிறாராம் ஜீத்து ஜோசப்.