Tuesday, September 17, 2024

தி கோட் படத்தில் நடித்துள்ள வெங்கட் பிரபு? சி.எஸ்.கே ரசிகர்கள் குதூகலம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தி கொட் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில் இரு வாரங்கள் படத்தின் சூட்டிங் நடக்கும் நிலையில், மொத்த சூட்டிங்கையும் முடித்துவிட்டு தி கோட் படக்குழு இந்தியா திரும்புவார்கள் என்ன சொல்லப்பட்டுள்ளது.அதே சமயம் வரும் 19ம் தேதி தமிழகத்தில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி விஜய் வாக்களிக்க இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளா, சென்னை, ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது.கேரளாவில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த போது நடிகர் விஜய்யை காண கேரள ரசிகர்கள் அவர் செல்லும் இடமெல்லாம் குவிந்து அவர் தரிசனத்தை கொண்டாடினர்.அவரும் ரசிகர்கள் மத்தியில் பேசி அவர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

இப்படத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது.இந்த கடைசிகட்ட படப்பிடிப்பில் பங்கேற்க்க சில நாட்களுக்கு முன் துபாய் வழியாக ரஷ்யா சென்றார் விஜய்.

விஜய்யின் தி கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு பல படங்களில் நடித்துமுள்ளார்.இந்நிலையில் கோட் படத்திலும் விஜய்யுடன் இணைந்து இவர் நடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் வெங்கட் பிரபு சிஎஸ்கே அணியின் ரசிகராக நடித்துள்ளதாகவும் இதற்கு முன்னர் கேரளாவில் நடைபெற்ற ஷூட்டிங்கில் வெங்கட் பிரபுவின் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

Read more

Local News