Tuesday, July 2, 2024

தி கோட் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள கங்கை அமரன்!!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராகவும் திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டிய புகழ்பெற்ற கங்கை அமரன் த கோட் படத்திற்கு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

தளபதி விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.இப்படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விஜய்யின் புதிய கீதை படத்திற்குப் பிறகு, மீண்டும் விஜய்யோடு இணைந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கோட் படத்தின் அப்டேட் கேட்ட போது அதற்கு சொல்ல முடியாது என்று சிரித்துக்கொண்டே பேசினார்.மேலும், இந்த முறை மனசுல க்ளியரா இருக்கேன். பேச்சு கிடையாது வீச்சுதான்.எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன்.ஒட்டுமொத்த படக்குழுவினரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். படத்தின் பின்னணி இசையும் நீண்ட காலம் பேசப்படும் என்று கணிக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.

தற்போது மேலும் ஒரு புதிய தகவல் வந்துள்ளது அது என்னவென்றால், யுவன் சங்கர் ராஜா இசையில் கங்கை அமரன் ஒரு பாடலை எழுதியிருப்பதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே பல பாடல்களை இட்டாக கொடுத்த கங்கை அமரன் இந்தப் பாடலையும் சிறப்பாக எழுதி இருப்பார் என இப்பாடலின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

- Advertisement -

Read more

Local News