Monday, November 18, 2024

விஜய்யின் தி கோட் படத்தில் அரசியல் உண்டா? இயக்குனர் வெங்கட்பிரபு என்ன சொன்னார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் வெங்கட் பிரபு “கஸ்டடி” திரைப்படத்துக்குப் பிறகு, விஜய்யின் 68-வது படமான “தி கோட்” படத்தை இயக்கியுள்ளார். “தி கோட்” திரைப்படம் 3 மணி நேரம் ஓடும் என தகவல் வெளியாகிய நிலையில், இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு நேர்காணலில் பதிலளித்துள்ளார்.

இந்தப் படம் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. நேர்காணலில், இப்படத்தில் அரசியல் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “எங்கள் படத்தின் படப்பிடிப்பின்போது தான் விஜய் அரசியலுக்கு வருவதை அறிவித்தார். எங்களால் என்ன செய்ய முடியும்? வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும். அதனால் படத்தில் அங்கங்கு அரசியல் தொடர்பான மேற்கோள்களை வைத்துள்ளோம். ஆனால் விஜய் அண்ணா இது வேண்டும், வேண்டாம் என எதுவும் சொல்லவில்லை. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக இருக்கும், என்றார்.

- Advertisement -

Read more

Local News