Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

திருமணத்திற்கு முன்பு நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த பிரேம்ஜி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

தமிழ் நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனின் திருமணம் வரும் ஜூன் 9, ஞாயிற்றுக்கிழமை திருத்தணியில் நடைபெற உள்ளது. பல ஆண்டுகளாக அவரது திருமணத்தைப் பற்றி அவர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது, 45வது வயதில் அவர் திருமணத்திற்கு முடிவு செய்துள்ளார்.இது குறித்து நேற்று வெங்கட் பிரபு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களே கலந்து கொள்கிறார்கள். மணமக்களை நேரில் சந்திக்காமல், இருக்கும் இடத்திலிருந்தே தங்கள் வாழ்த்துகளை அனுப்புங்கள் என்று அவரது அண்ணன், இயக்குனர் வெங்கட்பிரபு, நேற்று கேட்டுக் கொண்டார். பின்னர் திருமண வரவேற்பு சென்னை நகரில் பிரமாண்டமாக நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது..

இந்த நேரத்தில், பிரேம்ஜி அமரன் தனது நண்பர்களுக்கு ‘பேச்சுலர் பார்ட்டி’ வைத்துள்ளார். இதில் வெங்கட் பிரபு, பின்னணிப் பாடகர்கள் எஸ்பிபி சரண், யுகேந்திரன், நடிகர்கள் ஜெய், வைபவ், சுனில் ரெட்டி, சுப்பு பஞ்சு, தயாரிப்பாளர் டி. சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.பிரேம்ஜி தி கோட் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News