வடக்குப்பட்டி ராமசாமி, இங்கு நான்தான் கிங்கு படங்களுக்குப் பிறகு டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். இந்த நிலையில், நேற்று அவர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இது குறித்து வெளியான ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பலரும் சந்தானத்திற்கு வணக்கம் செலுத்த, அதற்கு அவர் வணக்கம் செலுத்தியபடி கோவிலை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கிறார்.
ஆனால், அந்த வீடியோவில் சந்தானத்தை காண்பிப்பதற்கு முன், ஒரு பெண் நடந்து வருவது போல காட்சி வருவதாக இடம் பெற்றுள்ளது. இதைக் கண்ட நடிகர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். அந்த கருத்தில், அந்த வீடியோவின் ஆரம்பத்தில் ஒரு பெண் நடந்து வருவதை பார்த்து, “சந்தானம்தான் பெண் கெட்டப்பில் வருகிறாரா?என்று குழம்பி பார்த்தவாறு அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.