Tuesday, September 24, 2024

தியேட்டர்களில் வரும் வசூல் குறைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை… இதெல்லாம் தான் மிகப்பெரிய காரணம் – இயக்குனர் வெற்றிமாறன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமாவின் தற்போதைய நிலைமை குறித்து பேசும் போது, தியேட்டர்களில் வரும் வசூல் குறைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஓடிடி நிறுவனங்கள் இங்கு ஒரு பெரிய பணப்பெருக்கத்தை உருவாக்கிவிட்டன. ஒரு கட்டத்தில் ரஜினி மற்றும் விஜய் ஆகியோரின் படங்களுக்கு 100 முதல் 120 கோடி ரூபாய் வரை தர தயாராக இருந்தார்கள். இதனால் நடிகர்களின் சம்பளம் அதிகரிக்கத் தொடங்கியது. படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்தது. ஆனால் காலப்போக்கில் இவ்வளவு செலவழிப்பது நமக்கு லாபத்தைத் தராது எனும் நிலையை ஓடிடி நிறுவனங்கள் புரிந்து கொண்டுவிட்டன. இதனால் அவர்கள் படங்களை வாங்குவதில் குறைவாக மையக்கூறுகின்றனர். அதே சமயத்தில், நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கி பழகி விட்டார்கள். பெரிய படங்களை எடுத்துக் கொண்டு போகும் வழக்கம் தொடர்ந்துவிட்டது இதுவே பிரச்சினையாகிவிட்டது.

சமீபத்தில் வெளியான “வாழை” படத்தை எடுத்துக்கொண்டால், மாரி செல்வராஜ் என்கிற பெயரே அதன் வியாபாரம். மற்றபடி அந்த படத்தில் உள்ளவர்களை பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனாலும், அந்த படம் அதன் தயாரிப்பு செலவைவிட இருமடங்கு அதிகமாக தியேட்டர்களில் வசூல் செய்துள்ளது. இதனால் தியேட்டர் வசூல் குறைந்து விட்டது என்பதெல்லாம் பொய்யான விஷயமாகிறது. நாமே நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயகமாக நம்மால் சொல்ல இயலும் கதைகளை தியேட்டர் ரசிகர்களுக்கு மட்டுமே முழு சுதந்திரத்துடன் சொல்ல முடியும். ஓடிடி தளங்களில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, பீப் சாப்பிடுவது போன்ற காட்சியை வைத்தால் அனுமதிக்க மாட்டார்கள். இதனால் அந்த அமைப்பு புண்படும், இந்த அமைப்பு புண்படும் எனக் கூறுவார்கள். அவர்கள் அதிக பணத்தை கொடுப்பதால், நிறைய கட்டுப்பாடுகளையும் விதிக்கிறார்கள் என்றார்.

- Advertisement -

Read more

Local News