கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கிய படம் ‘பையா’. பதினான்கு ஆண்டுகளக்கு முன்பு வெளியான இந்தப் படம் இப்போது மீண்டும் டிஜிட்டலில் வெளியாகிறது. இந்தப் படத்தின் “அடடா மழை டா’ பாடல் படப்பிடிப்பின் போது நடிகை தமன்னா கொடுத்த ஒத்துழைப்பை இயக்குநர் லிங்குசாமி பகிர்ந்திருக்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/Paiya_1.jpg)
“அடடா மழை டா’ பாடல் காட்சியை சாலக்குடியில் படமாக்கிய போது அடுத்தடுத்து உடைகளை மாற்ற வேண்டும் என்றால் கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கேரவனுக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நேரமாகும் என்பதால் இரண்டு பெண்களை அழைத்து சேலையை மறைப்பாக பிடிக்க சொல்லி எந்த தயக்கமும் இன்றி உடனடியாக உடை மாற்றிக் கொண்டு வந்து தமன்னா நடித்தார்.
பையா படத்தில் தமன்னா நடிக்கும் போது அவருக்கு 18 வயது தான். அவருக்கு முதல் பெரிய ஹிட் பையா தான். பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதிலும் “அடடா மழை டா’ பாடலுக்கு ஒன்ஸ்மோர் போட சொன்னார்கள். கடைசியில் என்ட் கார்டில் போடப்படும் பாடலுக்கு கூட ஒன்ஸ்மோர் கேட்டு பல பேர் அங்கேயே நின்று விட்டார்கள். தமன்னாவின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கை தட்டினார்கள்” என்று தமன்னா ஒத்துழைப்பு பற்றி தெரிவித்திருக்கிறார்