Tuesday, September 17, 2024

தனது பாடலையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்த அஜித்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித்குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்தான். ஆனால், காதலிக்கும் போது தனது படத்தின் பாடல் ஒன்றை ஷாலினிக்கு காதல் கடிதமாக எழுதி பரிசாக கொடுத்திருக்கிறார். அந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

அஜித் – ஷாலினி இணைந்து நடித்த படம் ‘அமர்க்களம்’. சரண் இயக்கிய அந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

அதில் “உன்னோடு வாழாத…” என்கிற பாடல் முழுவதையும் பதிவு செய்து தருமாறு இசையமைப்பாளர் பரத்வாஜிடம் அஜித் கேட்டுக் கொண்டாராம். பின்னர் அந்த பாடலின் பதிவை நடிகை ஷாலினிக்கு காதல் பரிசாக அஜித் கொடுத்திருக்கிறார். அந்த சுவராஸ்யமான தகவலை இசையமைப்பாளர் பரத்வாஜ் தனது நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த சுவாரஸ்யமான தகவலை… இசையமைப்பாளர் பரத்வாஜின் அனுபவத்தை முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்…

- Advertisement -

Read more

Local News