Tuesday, November 5, 2024

ஜிவி பிரகாஷ் தனுஷ் இடையே நடந்த 6 வருட மோதல்! மனம் திறந்த ஜிவி….

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமின்றி நல்ல நடிகர் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர். இவர் இசையமைத்தும் பாடியும் வெளிவந்த பாடல்களுக்கு பல ரசிகர்கள் அடிமை. இன்று அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் கள்வன் திரைப்படம் ரீலீஸ் ஆகியுள்ளது. இச்சமயத்தில் தனுஷூக்கும் தனக்கும் இடையேயான உறவின் நிலை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். அப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அமைத்த இசையை கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், சிறு வயதில் இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சிறப்பாக இசையமைத்துள்ளாரே என ஆச்சரியத்துடன் கொண்டாடினர்.

இப்படி பல படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு அமைத்திருந்த இசை உச்சக்கட்டத்திற்கு அலறவிட்டது. அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிடைக்காமல் போனது பலருக்கும் ஏமாற்றத்தை பெற்று தந்தது.தொடர்ந்து இசையமைத்து வந்த அவருக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது.

இதற்கிடையே ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பிது பிரபல நடிகரும் ஆனார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படங்கள் கவனம் பெற்றன.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இன்று கள்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில். தனக்கும் தனுஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றின் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதாவது, ‘இரண்டு நண்பர்கள் இருக்கும்போது சண்டை வருவது எல்லாம் சகஜமான விஷயம்தான். அப்படித்தான் எனக்கும், தனுஷுக்கும் பிரச்னை வந்தது. இதனால் நாங்கள் இரண்டு பேரும் ஆறு வருடங்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். இப்போது எல்லா பிரச்னைகளையும் சரி ஆகிவிட்டது. தற்போது நானும் தனுஷூம் நல்ல நண்பர்கள் தான் எங்களுக்குள் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

Read more

Local News