தமிழ்த் திரையுலகில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபமடைந்த நடிகை சரண்யா பொன்வண்ணன், அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து ஆபாசமாக திட்டியதோடு, கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, பக்கத்துவீட்டு பெண் ஸ்ரீதேவி சிசிடிவி காட்சிகளை சமர்ப்பித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருகம்பாக்கம் ‘சின்ன கலைவாணர் விவேக் சாலை’யில் நடிகை சரண்யா பொன்வண்ண வீடு உள்ளது.