Thursday, August 8, 2024

கேரளாவில் என்னை தமிழ் பெண் என்றுதான் நினைக்கிறார்கள்… ஜோ பட நடிகை ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை மாளவிகா மனோஜ். 2022-ம் ஆண்டில் வெளிவந்த ‘பிரகாஷன் பரக்கட்டே’ என்ற மலையாள படத்தின் மூலம் அவர் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு, அவர் ‘நாயாடி’ படத்தில் நடித்தார்.

தமிழில் அவர் ‘ஜோ’ படம் மூலம் அறிமுகமானார். ‘பிரகாஷன் பரக்கட்டே’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானாலும், தமிழில் அவர் நடித்த ‘ஜோ’ படம்தான் அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. தற்போது, மாளவிகா மனோஜ் ஒரு திரைப்படம் மக்களை சென்றடைய சமூக வலைதளம் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “ஜோ” வெளிவந்தபோது அதற்கான ரீல்ஸ்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டன. இதன் மூலம் படம் அதிகமான மக்களை சென்றடைந்தது. இந்நாட்களில் இவ்வாறு ரீல்களைப் பார்த்துதான் பலர் படம் பார்க்க முடிவு செய்கிறார்கள் என்றார்.

இப்போதும், நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை சுச்சி என்றே அழைக்கிறார்கள். இப்படம் வெளியாவதற்கு முன் கேரளாவில் என்னை யாருக்கும் தெரியாது. ஆனால், படம் வெளியான பிறகு என்னை பலருக்கு தெரிந்தது. கேரளாவில் ‘ஜோ’ படம் ஓடிடியில் மட்டுமே வெளியானது. இதனால், நான் ஒரு தமிழ் பெண் என்று கேரளாவில் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள், ஆனால் நான் ஒரு மலையாளி என்றார்.

- Advertisement -

Read more

Local News